கோலாலம்பூர், நவம்பர்-12 – மகனை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய்க்கும், அவனை எட்டி உதைத்து அதனை வீடியோவில் பதிவுச் செய்த அவரின் இரு தோழிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் அக்குற்றத்தை புரிந்ததை ஒப்புக் கொண்ட அத்தாய்க்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 14 நாள் சிறையும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
இன்று தொடங்கும் 14 நாள் சிறைவாசம் முடிந்ததும், 6 மாத காலக்கட்டத்தில் 240 மணி நேரங்களுக்கு சமூகச் சேவையில் ஈடுபட வேண்டுமென்றும் 20 வயது அவ்விளம் தாய் உத்தரவிடப்பட்டார்.
அதோடு, பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் 5 ஆண்டுகளுக்கு நன்னடத்தை பேண வேண்டும் எனவும் அப்பெண் பணிக்கப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட அவரின் இரு தோழிகளுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது.
பிப்ரவரி 23-ஆம் தேதி தாமான் டானாவ் டேசாவில் உள்ள வீட்டில் அம்மூவரும் சேர்ந்து மூன்றரை வயது சிறுவனுக்குக் காயம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.