Latestமலேசியா

மகளை அடித்த குற்றத்திற்காக சிறைக்கு சென்ற தம்பதியர்

குவாலா பிலா, ஏப் 29 – 3 வயதுடைய தங்களது மகளை முறையாக கவனிக்கத் தவறியதற்காக விதிக்கப்பட்ட மொத்தம் 10,000 ரிங்கிட் அபராதத்தை செலுத்த தவறியதற்காக, கணவன் – மனைவி இருவர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, 32 வயது எஸ். பிரபுவும் அவரது மனைவியான 31 வயது ஆர். கலைவாணியும், குவால பிலா செஷன் நீதிமன்றத்தில் தங்களது குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் அவ்விருவருக்கும் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த தம்பதியர் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, Jempol, Kelpin தோட்டத்தில் உள்ள வீட்டில் , தங்களது மகளை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!