
கோலாலம்பூர், ஜன 14 – இனியும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டுனான விரோதத்தை தாம் தொடர விரும்பவில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கின்றார்.
அதோடு, அனைத்து தரப்பினரும், நாட்டை வழிநடத்த தமக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், மகாதீருடனான தமது உறவு குறித்து , குறிப்பாக எதுவும் கருத்துரைக்காத அன்வார், தற்போது தமது முழு கவனம் பிரதமராக தமது கடைமையை செவ்வனே ஆற்றுவதில் இருப்பதாகக் கூறினார் .
இந்தோனேசிய CNBC தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியிருந்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.