Latestமலேசியா

மகாதீர் சீர்திருத்தங்களைக் கொண்டு வர விரும்பவில்லை ! அன்வார்

கோலாலம்பூர், செப் 23 – சீர்திருத்தங்களை விரும்பாத ஒரு தலைவரால் வழிநடத்தப்பட்டதால், பக்காத்தான் ஹரப்பானால் சீர்த்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போனதாகக் கூறியிருக்கிறார் , அன்வார் இப்ராஹிம்.

நாட்டின் ஏழாவது பிரதமராக பொறுப்பேற்ற துன் மகாதீர் , மீண்டும் இனவாத அரசியலுக்கு திரும்பினார். இது பல்வேறு இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்கத்தான் ஹரப்பானின் கொள்கைக்கு எதிராக இருந்ததாக, கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மகாதீர் சீர்திருத்தங்களை நம்பாதவர். இரண்டாவது முறையாக பிரதமராகிய பின்னர், அவர் மலாய் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் மலாய் காங்கிரசில் கலந்து கொண்டது உட்பட இனவாத அரசியலை வலுவாக கடைப்பிடித்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!