Latestஉலகம்

மகாராஷ்டிராவில் இரு ரயில்கள் மோதிக்கொண்டன 50க்கும் மேற்பட்டோர் காயம்

புதுடில்லி, ஆக 17 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணிகள் ரயிலும் , சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சத்திஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மகராஷ்டிராவில் கோண்டிய ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயிலுடன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோதியது. அந்த விபத்தில் பயணிகளின் ரயிலின் மூன்று பெட்டிகள் தரம் புரண்டன, அந்த பெட்டியில் இருந்து பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். சிக்னல் கோளாறினால் அந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. பயணிகள் ரயில் ஓட்டுனர் அவசர பிரேக்கை வைத்தபோதிலும் சரக்கு ரயிலுடன் மோதுவதை தவிர்க்க முடியவில்லையென தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!