கோலாலம்பூர், மார்ச் 1 – டத்தோஶ்ரீ அசாலினா ஒத்மானுக்குப் பதிலாக மக்களவையின் புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
அவையின் புதிய துணைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம், இன்று மக்களவையின் நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக இடம்பெற்றிருந்தது. எனினும், அந்த தீர்மானத்தை அடுத்த மக்களவை கூட்டத்திற்கு கொண்டு செல்லும் பரிந்துரையை பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சூடின் முன் வைத்தார்.
பின்னர் அவரது பரிந்துரை அடங்கிய தீர்மானத்தை மக்களவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.