கோலாலம்பூர், பிப் 28 – இன்று மக்களவை கூட்டத்தின்போது , இணையத்தில் தாம் பொருட்களை வாங்கியதாகக் கூறப்படுவதை செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரெசா கோக் (Teresa Kok) மறுத்துள்ளார்.
இணையத்தில் செய்தியை படித்துக் கொண்டிருந்தபோது அந்த அகப்பக்கத்தில் இருந்த விளம்பரத்தையே தான் கிளிக் செய்ததாக , DAP – யைச் சேர்ந்த அவர் கூறியுள்ளார்.
மக்களவையில் அமர்ந்திருந்தபோது, Teresa Kok -கின் கணிணி திரையில் உடைகளின் படம் தெரியும் படத்தை வங்சா மாஜூவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ ஜூ கியுங் (Wee Choo Keong) தமது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
பின்னர் அந்த பதிவினை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்பும் பகிர்ந்ததை அடுத்து, அந்த பதிவிற்கு பலர் பலவாறான கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.