
கோலாலம்பூர், ஏப் 1 – Terengganuவில் , Kerteh Felda வட்டாரத்தில் மக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு பெரும் மிரட்டலாக இருந்து வந்த 104 கிலோ எடை கொண்ட பெண் புலி பிடிபட்டது. Kerteh Rasau வில் பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் வைத்த பொறியில் அந்த புலி சிக்கியதாக அத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Abdul Kadhir தெரிவித்தார். புலிகள் இனம் அழிந்துவருவதால் அந்த மிருகத்தை உயிருடன் பிடிக்கும் Perhilitan முயற்சி வெற்றி பெற்றதாக அவர் கூறினார். இவ்வாண்டு பெல்டா பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட மூன்றாவது புலி இதுவாகும் .