Latestமலேசியா

மக்களின் எதிர்ப்பலையைத் தவிர்க்க அமுலாக்கத்திற்கு முன்கூட்டியே அரசின் கொள்கைகள் முறையாக விளக்கப்பட வேண்டும் – ரமணன்

கோலாலம்பூர், ஆக 5 – அரசாங்கம் எவ்வளவு பயன் மிக்க சீர்த்திருத்த திட்டங்களையோ கொள்கைகளையோ அமுலுக்கு கொண்டு வந்தாலும் அவை முன்கூட்டியே மக்களிடம் முறையாக விளக்கப்படாவிட்டால் அவற்றுக்கு பெரிய எதிர்ப்பலை ஏற்பட்டுவிடக்கூடிய அபாயம் உள்ளது.

இதனை கருத்திற்கொண்டு அது போன்ற திட்டங்களை அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஊடகத்தின் முக்கிய பொறுப்பாளர்களிடம் அது பற்றிய விளக்கம் கொடுத்து மக்களை அந்த சிந்தனையில் தயார் படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன்.

அதே போல் சமூக ஊடகங்களில் அரசியல் நோக்கத்தோடு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புவதை தடுப்பதற்கும் அரசாங்கத்தின் எல்லா அமைச்சுக்களைச் சேர்ந்த தகவல் பிரிவு அதிகாரிகளும் சீரிய முறையில் செயலாற்ற வேண்டும் என ரமணன் தெரிவித்தார். 

இலக்கிடப்பட்ட டீசல் உதவித்தொகை அமலாக்கத்திற்கு வந்த எதிர்ப்பை சுட்டிக்காட்டிய அவர் அமைச்சரவையில் எடுக்கின்ற முடிவுகளைத் தற்காக்கின்ற பொறுப்பு பிரதமருக்கு மட்டுமே உண்டு என்பதில்லை. அனைத்து அமைச்சர்களும் அதை தற்காத்து ஒரு மித்த குரலில் விளக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.

தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட பல்வேறு 19 கட்சிகள் இருப்பதால்  சீர்த்திருத்தம் செய்வதில் சற்று காலம் பிடிக்கும். அதனால் பிரதமர் எதனையும் செய்யவில்லை என சொல்ல முடியாது. அவர் முழு அமைச்சர், அரசாங்க உயர் அதிகாரிகள் மீது MACC சுதந்திரமாக விசாரணை மேற்கொள்ள அனுமதித்தது போன்றவை கடந்த கால அரசாங்கங்களில் நடக்காத ஒன்று என விளக்கமளித்தார். 

ரிங்கிட்டின் நாணய மதிப்பு உயர்வு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்றவை பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளால் வந்த மாற்றம் என்றார் அவர்.

பெர்னாமா தலைவர் Datuk Seri Wong Chun Wai தலைமையிலான Concorde Club எனும் முக்கிய ஊடக தலைமை பொறுப்பாளர்களுடனான நடந்த கலந்துரையாடலில்  கலந்து கொண்ட  ரமணன் இவ்விபரங்களை பகிர்ந்து கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!