Latestஉலகம்மலேசியா

மக்களின் மனநல ஆரோக்கியத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் ; லீ லாம் தாய்

புத்ராஜெயா, ஜூலை 10 – மக்களின் மனநல ஆரோக்கிய விவகாரத்தில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நாட்டிற்கு அதனால் தீய விளைவுகள் ஏற்படக் கூடுமென , Ikatan Komuniti Selamat அமைப்பின் தலைவர் டான்ஶ்ரீ லீ லாம் தாய் (Tan Sri Lee Lam Thye ) எச்சரித்திருக்கின்றார்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மக்கள், தற்போது பொருட்களின் விலை உயர்வால் அதிகம் விரக்திக்கு தள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் கஷ்டத்தால் இதுபோன்று மனதளவில் பாதிக்கப்படுபவர்கள், ஒரு கட்டத்தில் நிலைமை மீறி தவறான முடிவுகளை எடுக்க தூண்டிவிடுகிறது.

எனவே, இதுபோன்று மக்கள் மன நலத்தை பாதிக்கக் கூடிய விவகாரங்களில் அரசாங்கம் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமென லீ லாம் தாய் குறிப்பிட்டார்.

2015 -ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட தேசிய சுகாதாரம் மீதான ஆய்வில் , 16 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மனநல பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!