
புத்ரா ஜெயா, நவ 27 – மக்களுக்கான உதவித் தொகை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு 2 வாரகால அவகாசம் தேவையென பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். வாழ்க்கை செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றம் மக்களுக்கான உதவித் தொகை தொடர்பான பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே தேவைப்படுவோர் மட்டுமே உதவித் தொகை பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு உதவித் தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார். இது தொடர்பாக தனியார் துறை, முதலிட்டாளர்கள் ஆகியோரிடம் விவாதித்து மக்களின் சுமையை குறைப்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டியிருப்பதாக புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.