Latestமலேசியா

மக்களுக்கு மூடா கட்சி உதவுவதைக் கண்டு என்ன பயம் ? வினவுகிறார் சயிட் சாடிக்

கோலாலம்பூர், ஜன 14 – தமது மூவார் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூடா கட்சி உதவ அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வியெழுப்பி இருக்கின்றார் , அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான Syed Saddiq Syed Abdul Rahman.

வார இறுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை துப்புறவு செய்யும் தங்களது விண்ணப்பத்திற்கு, மூவார் மாவட்ட மன்ற அலுவலகம் அனுமதி தரவில்லை என அவர் கூறியுள்ளார். அந்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை.

அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கவும் மூடா கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . உதவி பெறுபவர்களின் பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டால் தான் அதற்கு அனுமதி அளிக்கப்படுமென மூவார் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!