சியோல்,பிப் 15 – ஒமிக்ரோன் வைரஸ்-சின் தாக்கத்தை அடுத்து, தென் கொரியா , அதன் மக்களுக்கு பிப்ரவரி மாத இறுதியில் நான்காவது கோவிட் தடுப்பூசியைப் போடவுள்ளது.
அந்நாட்டில், 57 விழுக்காட்டினர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பாதிப்பு அதிகமிருக்கும் குறிப்பிட்ட வயதினர் அல்லது நோயின் பாதிப்பு உள்ளவர்கள் முதலில் நான்காவது தடுப்பூசியை எடுத்துக் கொள்வர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.