Latestஉலகம்

மக்களே கவனம்: இரவில் 1 மணிக்குப் பிறகு தூங்கச் செல்பவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படலாம்

அமெரிக்கா, ஜூன்-23 இரவில் 1 மணிக்கு மேல் தூங்கச் சென்றால் மனநலம் பாதிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது தினமும் தாமதமாக உறங்குபவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.

இரவில் மிகவும் தாமதமாக உறங்குபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி, சமநிலையற்ற ஹோர்மோன் (hormone) சுரப்புத் திறன் ஆகியவை ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக, அமெரிக்காவின் Standford பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சுமார் 74,000 இளைஞர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், இரவில் சீக்கிரமாகவோ அல்லது குறைந்தது நள்ளிரவுக்கு முன்பாகவோ தூங்கச் செல்பவர்களைக் காட்டிலும், அதிகாலை 1 மணிக்குப் பிறகு தூங்குபவர்களிடம் தான் மேற்கண்ட உபாதைகள் அதிகம் காணப்பட்டுள்ளன.

இரவில் சீக்கிரமே தூங்கி சூரியன் உதிக்கும் போது எழுபவர்கள் மத்தியில் தான், மிகவும் ஆரோக்கியமான மனநலம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே இரவில் குறைந்தது 7 முதல் 9 மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் தூக்கப் பழக்கத்தை மாற்றுவதற்கு கடினமே என்றாலும், முடிந்த வரை கொஞ்சம் சீக்கிரமே தூங்கச் செல்லுமாறு மக்களை அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!