
கோலாலம்பூர், செப் 30 – நாட்டில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமட்டைந்து வருவதால், எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்துகிறது சுகாதார அமைச்சு. வெளி நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுதல், முக கவசம் அணிந்துக் கொள்ளுதல், போதுமான நீர் பருகுவது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துமாறு அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பு வெளியிட்ட தகவல் படி நெகிரி செம்பிலான் நீலாயில் API அளவீடு 148 ஆகப் பதிவாகியுள்ளது. செராஸ் மற்றும் ஷா ஆலாமிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளன.
இது பிற இடங்களிலும் பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இருமல், சளி, ஆஸ்துமா, கண் எறிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அமைச்சு கூறியுள்ளது.