Latestஉலகம்

மக்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ள ஹங் காங்

ஹங் காங், பிப் 23 – கோவிட் தொற்று எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்திருப்பதை அடுத்து, ஹங் காங் , அதன் 75 லட்சம் மக்களையும் கட்டாயம் கோவிட் பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

மார்ச் மத்தியில், மூன்று கட்டமாக மக்கள் அனைவரும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஹங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் ( Carrie Lam) தெரிவித்தார்.
கோடை கால பள்ளை விடுமுறை முன்கூட்டியே தொடங்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் தொடக்க காலத்தில் முதல் ஈராண்டுகளி ஹங்காங்கில் 200 மரணங்களுடன் 12, 650 கோவிட் தொற்றுகளே பதிவாகின.
ஆனால் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி அந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!