
கோலாலம்பூர், மார்ச் 15 – எதிர்கட்சிகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே, அரசாங்கத்தின் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்த வேண்டுமே தவிர , அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக செய்வதை தவிர்க்க வேண்டுமென பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி (Rafizi Ramli) கேட்டுக் கொண்டார்.
நானும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். எந்தவொரு மோசடியையும் பொதுவில் அம்பலப்படுத்த முடிவை எடுக்கும்போது, அந்த முடிவு மக்களின் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில் எடுத்ததாக இருக்கும்.
அதற்காக, ஏற்கனவே பொது மக்களின் பார்வைக்காக இருக்கும் ஆவணங்களையே தாம் வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரே ஒரு முறை மட்டுமே 1MDB வழக்கில் ரகசிய காப்பில் இருந்த ஆவணத்தை வெளியிட வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டதாக ரபிசி கூறினார்.
சில அரசாங்க தலைவர்களின் முறைகேடுகளைக் காட்டும் கோப்புகள் தம்மிடம் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சய்னூடின் (Datuk Seri Hamzah Zainuddin) கூறியிருந்தது தொடர்பில், ரபிசி அவ்வாறு கருத்துரைத்தார்.