Latestஉலகம்

மக்காவில் கோவிட் தொற்று பரவல் மோசமடைகிறது

ஹங்காங், ஜூன் 30 – உலகின் மிகப் பெரிய சூதாடட மையங்களை கொண்ட Macau-வில் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து மோசமடைகிறது. சீனாவின் ஆட்சியில் இருக்கும் அந்த பிரதேசத்தில் குடியிருக்கும் அனைத்து மக்களும் கோவிட் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டனர். சுகாதார அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் உட்பட பலர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கோவிட் தொற்று மிக வேகமாக பரவி வருவதால் தினசரி பரிசோதனை செய்துகொள்ளும்படி அங்குள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவிட் சோதனையை மேற்கொண்டனர். 7,000த்திற்கும் மேற்பட்டோர் தனித்திருக்கும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!