சிரம்பான், ஜன 8 – பொருளகத்தின் அதிகாரிகள் என கூறிக்கொண்ட மக்காவ் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் வழக்கறிஞர் ஒருவர் 115,000 ரிங்கிட்டை இழந்தார். முதலில் வங்கியின் அதிகாரி என கூறிக்கொண்ட ஒருவர் 54 வயதுடைய அந்த வழக்கறிஞரிடம் தொடர்புகொண்டு அவர் பயன்படுத்திய கிரெடிட் கார்டில் சில சந்தேகங்கள் இருப்பதாக பேச்சு கொடுத்துள்ளார். உண்மையில் தாம் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதே இல்லையென அந்த வழக்கறிஞர் மறுமொழி தெரிவித்தார். அதன் பின் தங்களை பேங்க் நெகாரா அதிகாரிகள் என கூறிக்கொண்ட மேலும் சிலர் அந்த வழக்கறிஞரிடம் பல்வேறு சுவ விவரங்களை பெற்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து 11 5,000 ரிங்கிட்டை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த வழக்கறிஞர் இதுகுறித்து புகார் செய்துள்ளார் என நெகிரி செம்பிலான் வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் Aibee Abdul Ghani தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்6 hours ago