
ஜோகூர் பாரு, ஜன 9 – Iskandar Puteri – யைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவர் Macau மோசடிக் கும்பலிடம் 1.3 மில்லியன் ரிங்கிட்டை ஏமாந்திருக்கிறார். சபாவில் போலி கோவிட் -19 விவகாரத்தில் அந்த விரிவுரையாளர் சம்பந்தப்பட்டுள்ளார் என கூறி அவரை மோசடிக் கும்பல் ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 17 – ஆம் தேதி மற்றும் நவம்பர் 25 – ஆம் தேதிக்கிடையே தமது வங்கிக் கணக்கிலுள்ள பணம் அனைத்தும் மாயமானதை அறிந்து அந்த விரிவுரையாளர் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்