
பினாங்கு, அக் 3 – மக்காவ் கும்பலைச் சேர்ந்த மோசடி கும்பலிடம் 19 லட்சம் ரிங்கிட் இழந்தது தொடர்பாக பெண் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு தனது வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்கு அனுமதித்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்தனர். 31 வயதுடைய அந்த ஆடவன் பினாங்கு தென் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். அந்த நபர் சுகாதார அமைச்சின் ஊழியராகவும் பின்னர் போலீஸ் அதிகாரியாக நடித்து 67 வயது பெண்மணி ஒருவர் கோவிட் 19 குறித்து பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக அவரை ஏமாற்றியுள்ளான்.
அந்த பெண் தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு மோசடி கும்பலின் உத்தரவுகளை ஏற்று தமக்கு வழங்கப்பட்ட வங்கிக் கணக்கில் தமது வங்கிக் கணக்கிலிருந்து 19 லட்சம் ரிங்கிட்டை 24 முறை பட்டுவாடா செய்திருக்கிறார்.
இதனிடையே செயல்படாத கடன் நிறுவனத்றிகு தமது வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்கு அனுமதியளித்த மற்றொரு 19 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். 21 வயதுடைய குமாஸ்தாவான பாதிக்கப்பட்ட பெண் 16 முறை அந்த வங்கிக் கணக்கிற்கு 14,840 ரிங்கிட்டை பட்டுவாடா செய்தாகவும் தெரியவந்துள்ளது.