
குவந்தான், ஜன 26 – குவந்தானைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் Macau மோசடிக் கும்பலிடம் 233, 480 ரிங்கிட்டை இழந்தார். பொருட்களை பட்டுவாடா செய்யும் நிறுவனத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்ட சந்தேகப் பேர்வழி ஒருவரிடம் தொலைபேசி அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து 55 வயதுடைய அந்த ஆசிரியை மோசடிக்கு உள்ளாகியதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ Ramli Mohamed Yoosuf தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகித்தது மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மிரட்டியதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை தமது வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வங்கியிலுள்ள அனைத்து பணத்தையும் மக்காவ் மோசடிக் கும்பல் களவாடியிருப்பதாக ரம்லி முகமட் யூசோப் கூறினார்.