
கோலாலம்பூர், மார்ச் 8 – அனைத்துலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் பெண்கள் அனைவருக்கும், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தமது மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் என்றார் பாரதி.
எந்தவொரு சூழ்நிலையிலும், தான் வரித்துக் கொண்ட லட்சியத்திலிருந்து, தன்னுடைய உயர்ந்த சிந்தனைகளில் இருந்தும் கீழே இறங்கி வரமாட்டாள் பெண் என கூறினார் பாரதி.
அத்தகையை பெண்கள் நாடும் வீடும் உயர பாடுபடுகின்றனர். அதை கண்கூடாகவே பார்க்கும் நாம் பெண்களை எப்போதும் போற்றுவதோடு அவர்கள் வாழ்க்கையின் ஏற்றத்திற்கு வழிவகுக்குமாறும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கேட்டுக் கொண்டார்.