Latestஉலகம்

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி !

புதுக்கோட்டை, ஜன 17 – பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் , துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

ஜல்லிகட்டு போட்டியின்போது காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்படும். ஆனால் மஞ்சுவிரட்டு போட்டியின்போது , மந்தையிலிருந்து அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்படும். அவ்வாறு ஆங்காங்கே சிதறி ஓடும் காளைகளை அடக்கும் சவாலான இந்தப் போட்டியில் , 20-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!