அன்டனானரிவோ, பிப் 8- இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைப் பெரும் புயல் தாக்கியதில் அங்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் ஆவர்.
மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் ‘Batsirai’ எனப்படும் அந்த புயல் தாக்கியதில் மடகாஸ்கர் தீவின் 20 சாலைகள் மற்றும் 17 பாலங்கள் துண்டிக்கப்பட்டன.
இன்னும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்திருப்பதோடு 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிர்த்து வருகின்றனர்.