கோலாலம்பூர், நவம்பர்-24, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்று வரும் 2TM எனும் மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டு கொண்டாட்டம், இதுவரை 200,000-கும் மேற்பட்ட வருகையாளர்களை ஈர்த்துள்ளது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 85, 217 பேர் அந்நிகழ்வில் பங்கேற்றதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.
இரண்டாம் நாளான நேற்று மாலை 6 மணி வரையில் 117,912 பேர் வருகைத் தந்துள்ளனர்.
இந்த 3 நாள் விழாவில் 230,000 பேர் பங்கேற்க அரசாங்கம் இலக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவ்விலக்கு, கடைசி நாளான இன்று எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் நாள் நிகழ்வுக்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், TownHall கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த 3 நாள் விழாவில் மக்களுக்கான பல்வேறு சேவைகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
போலீஸ் சம்மன்களுக்கு 60 விழுக்காடு கழிவு, ஹெல்மட் பரிமாற்றம், சந்தை விலைக்கும் குறைவான விலையிலான ரஹ்மா மலிவு விற்பனை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இன்று தனது ஈராண்டை நிறைவுச் செய்கிறது