Latestஉலகம்

மணமகனை விமான நிலையத்தில் நிர்கதியாக விட்டு விட்டு கம்பி நீட்டினார் மணப்பெண்

லண்டன், ஆகஸ்ட் 17 – மறுநாள் திருமணம். ஆனால் முதல் நாளன்றே லண்டனிலுள்ள ஹீத்ரோவ் (Heathrow) விமான நிலையத்தில் மணமகனைத் தன்னந்தனியாக விட்டு விட்டு, பணம் மற்றும் துணிப் பெட்டியோடு கம்பி நீட்டியிருக்கின்றார் மணப் பெண்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, ஹீத்ரோவ் விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் ரோம் (Rom) நகர் புறப்பட்டு அங்கு திருமணம் செய்து கொள்ள எண்ணிய அந்த பிரிட்டனிய மாப்பிள்ளையின் கனவு இதனால் கலைந்து போனது. விமான நிலையத்தில் இருந்த போது மாப்பிள்ளை சிறிது நேரம் கழிவறை சென்றிருந்த சமயம் பார்த்து, திருமணச் செலவுக்காக அவர் கொடுத்திருந்த 5,000 பவுண்ட் அதாவது மலேசிய ரிங்கிட்டின் மதிப்புக்கு 27,000 ரிங்கிட்டோடு மணப் பெண் தப்பியோடியுள்ளார். மாப்பிள்ளையின் துணிப் பெட்டியையும் அவர் திருடிச் சென்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் அவ்வாடவர் அப்பெண்ணைச் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ள இருவருமே ஒப்புக் கொண்டு, இத்தாலி புறப்படத் தயாராக இருந்த போது தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து தலைமறைவாகியிருக்கும் அப்பெண் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!