Latestமலேசியா

மணல் ஏற்றிச் சென்ற லோரி பள்ளத்தில் கவிழ்ந்தது; பெண் மரணம்

கூலிம்,மே 10 -மணல் ஏற்றிச் சென்ற லோரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அந்த லோரியில் இருந்த அப்பெண்ணின் கணவர் தலையில் காயம் அடைந்ததோடு அவரது கையில் எலும்பு முறிவுக்கும் உள்ளானார். இந்த பரிதாப சம்பவம் கூலிம், Junjong, Kampung Air Putehவிலுள்ள Kuari Pancor ரில் நேற்று காலை மணி 8.40 அளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து கூலிம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு மணல் ஏற்றியிருந்த லோரி பள்ளத்தில் விழுந்து கிடந்ததோடு அதில் ஒரு தம்பதியர் இருந்தனர்.

அவர்களில் 30 வயதுடைய பெண் ஒருவர் மரணம் அடைந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவ பணியாளர் உறுதிப்படுத்தினார். அந்த பெண்ணின் கணவர் தலை மற்றும் கையில் காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். லோரியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க உதவும் நடவடிகைக்கு பினாங்கு சுங்கை பக்காப் தீயணைப்பு நிலையத்தின் பணியாளர்களும் உதவி செய்ததாக கூலிம் தீயணைப்பு அதிகாரி Hamizul Azwan தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!