Latestமலேசியா

மணல் லோரி மோதியது; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணம்

கோலாலம்பூர், ஆக 30 – ஜோகூர், கோத்தா திங்கி, கம்போங் செமங்காரில் மணல் லோரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 39 வயதுடைய முகமட் சுதி யஹ்யா ( Mohd Suti Yahaya, ) அவரது மனைவியான 27 வயதுடைய
சித்தி ஜமாலியா மொஹமட் யாத்திம் ( Siti Jamaliah Mohd Yatim ) அவர்களது பிள்ளைகளான 4 வயது Nur firman மற்றும் 7 மாதக் குழந்தை Nurfatihah Janaah ஆகியோர் கடுமையாக காயம் அடைந்ததால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர் . அந்த நால்வரும் யமஹா மோட்டார் சைக்கிளில் கோத்தா திங்கியிலுள்ள கம்போங் மாவாய்யிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்திற்குள்ளாகி மாண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!