மணிலா, பிப் 23 – பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்த மாதம் கோவிட் தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் அகற்றப்படவுள்ளன. அந்நாட்டில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதை தொடர்ந்து கோவிட் தொற்று குறைந்துள்ளதாக பிலிப்பின்ஸ் அதிபரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடுகளுக்கான எல்லைகளை திறந்ததைத் தொடர்ந்து கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பிலிப்பின்ஸ் அரசாங்கங்கம் அறிவித்தது.
மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு பிலிப்பின்சில் வசிக்கும் 13 மில்லியன் மக்கள் நகர் பொது வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்படும். எனினும் பொது நிகழ்வில் மக்கள் முகக் கவசத்தை அணிவது தொடர்ந்து கட்டாயமாக உள்ளது,