Latestமலேசியா

மதமாற்றத்திற்கு சட்டம்: பெற்றோர் அனுமதி தேவை – டாக்டர் ராமசாமி வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 18 – சட்டத்திற்கு உட்பட்டும் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரின் அனுமதியோடு பிள்ளைகளுக்கு மதமாற்றம் செய்யப்பட்டால் அது குறித்து எந்தவொரு சர்ச்சையோ அல்லது எவரும் கேள்வி எழுப்பப்போவதில்லை என பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார்.

சில பொறுப்பற்ற தரப்பினர்தான் Loh Siew Hong கின் வயதுக் குறைந்த மூன்று பிள்ளைகளையும் மதம் மாற்றம் செய்து பெரிய சர்சையாக்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பெற்றோர் இருவரின் அனுமதியின்றி வயதுக் குறைந்த பிள்ளைகள் மதமாற்றம் செய்ய முடியாது என சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

Low Siew Hong கின் பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களது தந்தைதான் அனுமதி வழங்கினாரே தவிர தாய் அல்ல. அந்த பிள்ளைகளை அவர்களது தந்தை மதமாற்றம் செய்ய அழைத்துவந்தபோது அவர்களது தாயார் அங்கு இல்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல . ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்படும்போதோ அல்லது அந்த சூழ்நிலையில் சமய அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து அவசர அவசரமாக மத மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் என்றும் ராமசாமி தமது முகநூலில் வினவியுள்ளார்.

Low Siew Hong னை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதைவிட அவரை கண்டறிவதற்கு கூடுதல் கவனம் அல்லது முயற்சி செய்யவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமாகும். ஒரு பிள்ளைக்கு எது தேவை அல்லது என்ன வேண்டும் என்பதை தாய்க்குத்தான் தெரியுமே தவிர சமய அதிகாரிகளுக்கு அல்ல என ராமசாமி விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!