
கோலாலம்பூர், ஆக 23 – கடந்த வாரம் கிள்ளானில் நடைபெற்ற மத மாற்ற சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கலந்துகொள்ளும்படி பெர்கிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் சமூக நல சங்கம் கேட்டுக்கொண்டதாக கிள்ளான் பெர்கிம் சங்கத்தின் தலைவர் Hushim Salleh உறுதிப்படுத்தினார். உண்மையில் அந்த சடங்கு கிள்ளான் பெர்கிம் அலுவலகத்தில் நடைபெற வேண்டியிருந்ததே தவிர பள்ளிவாசலில் அல்ல என அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர் மற்றும் சீனர் சங்கம் அன்வாரை குறைகூறியிருந்ததைத் தொடர்ந்து Hushim Salleh இந்த விளக்கத்தை தெரிவித்தார். உண்மையில் இந்த நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென நடத்தப்பட்டதாக அவர் கூறினார். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் கூடியிருந்ததால் அவர்களை சந்திக்க வந்த பிரதமர் அன்வார் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பதற்காக Ar – Rahimah பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தார்.
அன்றைய தினம் கிள்ளான் பெர்கிம் தலைவர் என்ற முறையில் நான் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப எங்களது புதிய முஸ்லீம் சகோதரரின் மதமாற்ற நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டார். உண்மையிலேயே அந்த சடங்கு பெர்க்கிம் அலுவலகத்தில் நடைபெறவேண்டியிருந்ததே தவிர பள்ளிவாசலில் அல்ல . அந்த நிகழ்வு தற்செயலாக நடந்தது. Muhammad Anuar ரின் மத மாற்ற சடங்கில் கலந்துகொள்ளும்படி தாம்தான் அன்வாரை கேட்டுக்கொண்டதாக சமூக வலைத்தலைமான டுவிட்டரில் பதிவேற்றம் செய்த காணொளியில் Hushim Salleh தெரிவித்துள்ளார். இதனிடையே நாட்டிலுள்ள வெவ்வேறு இனங்களிடையே இருந்துவரும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இந்த விவகாரத்தை சர்ச்சையாக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என பினாங்கு Mufti Datuk Seri Wan Salim Wan Mohd Noor வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.