ஜோர்ஜ் டவுன், பிப் 16 – ஒரு தலைபட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்ட தனது 3 பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் லோ சியூவ் ஹோங் ( Loh Siew Hong).
இவ்வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தனது பிள்ளைகளைப் பார்க்கவும், அந்த சமூக நலத் துறை அனுமதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கெடா, ஜித்ராவில் உள்ள சமூக நலத் துறையில் தற்காலிகமாக அவரது பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவிட்டை சுட்டிக் காட்டி பிள்ளைகளை சந்திப்பதற்கு நேற்று அத்துறை , Loh Siew Hong- கிற்கு அனுமதி மறுத்திருந்தது.
இந்நிலையில், இன்று தனது பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவை வாங்கிக் கொண்டு அவர்களைப் பார்க்க சென்றிருப்பதாகவும்,கோவிட் சோதனை வேண்டியதில்லை எனவும் சமூக நலத்துறை கூறியிருப்பதாகவும் , உள்ளூர் ஊடமொன்றிடம் அவர் கூறியுள்ளார்.
மூன்றாண்டுகள் தேடலுக்கு பின்னர், தமது பிள்ளைகள் சமய அதிகாரத்துவ தரப்பிடமிருப்பதாக தகவல் கிடைத்து அவர்களைச் சந்தித்த லோ சியோவ் ஹொங், பின்னர் தனது பிள்ளைகள் மதம் மாற்றப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியுற்றுள்ளார்.