கோலாலம்பூர், பிப் 19 – வயதுக் குறைந்த பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதற்கு அனுமதியளிக்கும் காலம் கடந்த மாநில சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி வயதுக்குறைந்த பிள்ளைகளை மதமாற்றம் செய்வதற்கு பெற்றோர்கள் இருவரின் அனுமதியை பெற வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளதால் மாநிலங்களின் காலங்கடந்த சட்டங்கள் இனியும் பொருத்தமற்றதாகி விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காலம்கடந்த சட்டங்கள் பொருத்தமற்றதாகிவிட்டதால் வயதுக் குறைந்த பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் மாநில சட்டங்கள் அகற்றபட வேண்டும் என DAP யின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான டாக்டர் ராமசாமி வலியுறுத்தினார்.
வயதுக்குகுறைந்த பிள்ளைகளை மதம் மாற்றுவதற்கு பெற்றோரான தாய் மற்று தந்தை ஆகிய இருவரின் அனுமதிக்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்துள்ளது.
மாநிலங்களின் வயதுக் குறைந்த பிள்ளைகளுக்கான மத மாற்ற சட்டத்தை தங்களது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பான மாநில சட்டங்களில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
சமய நல்லெண்ணம் குறித்து தினசரி உரையாற்றுவபவர்கள் Loh Siew Hong தமது பிள்ளைகளை பராமரிப்பதற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் என டாக்டர் ராமசாமி கேட்டுக்கொண்டார்,