Latestமலேசியா

மதம் மாற விரும்பியவர் கேட்டுக்கொண்டதால் அவருக்கு இஸ்லாத்தை தழுவும் சடங்கை பிரதமர் நடத்தி வைத்தார் சமய விவகார அமைச்சர் – நய்ம் மொக்தார்

கோலாலம்பூர், ஆக 26 – மதம் மாற விரும்பிய ஒருவர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவரது விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற அது தொடர்பான சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார் என பிரதமர்துறையின் சமய விவகார அமைச்சர் Nai’m Mokhtar தெரிவித்திருக்கிறார். அன்வாரின் அந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கோ அல்லது எந்தவொரு சட்டத்திற்கும் எதிரானது அல்ல என Na’im தெரிவித்தாக பெர்னாமா தகவல் வெளியிட்டது.

மதம் மாற விரும்பிய தனிப்பட்ட நபர் ஒருவரின் கோரிக்கையைத்தான் அன்வார் நிறைவேற்றினார். இந்த நிகழ்வுகூட முன்கூட்டியே திட்டமிடாத நிகழ்வு என அவர் தெரிவித்தார். அந்த நபருக்கு இஸ்லாமிய சமயத்தை தழுவும் சடங்கை பிரதமர் செய்துவைத்தது அந்த நபரைப் பொறுத்தவரை அது புதுமையானது என்பதோடு புதிதாக இஸலாத்தை தழுவியவருக்கு அது வரலாற்று பூர்வமான தினமாகும் என Na’im Mokhtar சுட்டிக்காட்டினார். ஒருவரை மதம் மாற்றுவது பிரதமரின் பணி அல்ல என்பதால் இந்து ஒருவரை மதம் மாற்றும் சடங்கிற்கு அன்வார் தலைமையேற்றதற்கு பல தரப்பினர் இதற்கு முன் சாடியிருந்தனர், அது தொடர்பான காணொளியும் கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!