லங்காவி, ஏப்ரல்-29, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் கடைகளுக்கு முன்பு போல் வாடிக்கையாளர்கள் வருவதில்லை என ஆங்காங்கே குரல் ஒலிக்கும் நிலையில், லங்காவியில் மதிய உணவுக்காக ஹெலிகாப்டரில் குழுவொன்று வந்திறங்கியதால் உணவக உரிமையாளர் திக்குமுக்காடிப் போனார்.
தனது வாழ்நாளில் மிகச் சிறந்த தருணம் என 40 வயது
Zaidi Hassan வருணித்தார்.
ஹெலிகாப்டரில் தாங்கள் வரப் போவதாக அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த போது தொடக்கத்தில் தாம் அதனை நம்பவில்லை என்றார் அவர்.
யாரோ நண்பர்கள் தான் விளையாடுகிறார்கள் என அவர் சிரித்து கொண்டாராம்.
ஆனால் 20 நிமிடங்களில் பர பர சத்தத்துடன் உண்மையிலேயே ஹெலிகாப்டர் வந்திறங்கியதைக் கண்டு Zaidi திகைத்து நின்றார்.
உணவகம் அருகே பொட்டல் நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து அறுவரும், அவர்களுடன் பின்னால் கார்களில் வந்தவர்கள் என 10 முதல்15 பேர் அங்கு உணவருந்தியிருக்கின்றனர்.
மொத்தமாக அவர்கள் சாப்பிட்ட செலவு 500 ரிங்கிட்டாகும்
ஹெலிகாப்டரில் வந்த வாடிக்கையாளர்களுடன் Zaidi புகைப்படம் எடுத்துக் கொண்ட காணொலி வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்று வருகிறது