அம்பாங், பிப் 23 – ஜாலான் பண்டான் இன்டாவிலுள்ள கடையில் புகுந்து 78 ரிங்கிட் மதிப்புள்ள 12 டின் மதுபானங்களை திருடிக்கொண்டு தப்பியோடிய இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
இன்று விடியற்காலை மணி 4.05 அளவில் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த கடையிலிருந்து இரு ஆடவர்கள் ஓடி வருவதையும் அவர்களை துரத்திக்கொண்டு உதவுங்கள், உதவுங்கள் என ஒரு பெண் கூச்சலிட்டுககொண்டு வந்ததையும் கண்டுள்ளனர்.
சுமார் 50 மீட்டர் தூரம் துரத்திச் சென்ற போலீஸ்காரர்கள் 34 மற்றும் 28 வயதுடைய அந்த இரண்டு நபர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பிளாஸ்டிக் பையில் மதுபான டின்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohmad Farouk Eshak வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.