Latestமலேசியா

மதுபோதையில் கடையை மோதிய காரோட்டுநர் ; கடை ஊழியர் படுகாயம்

அம்பாங் ஜெயா, நவ 22 – மதுபோதையில் ஓட்டுநர் செலுத்திய காரொன்று கடையுடன் மோதியதை அடுத்து, தளவாடப் பொருள் விற்பனை கடையின் தொழிலாளர் படுகாயமடைந்தார். அந்த சம்பவம் Ampang Jaya, Jalan Kampung Pasir – ரில் நேற்று மாலை மணி 6-வாக்கில் நிகழ்ந்தது.

அச்சம்பவத்தில் , மதுபோதையில் Proton Preve காரை செலுத்திய 36 வயது மதிக்கத்தக்க ஆடவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் இயக்குனர் Norazam khamis தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!