Latestமலேசியா

மதுபோதையில் தவறான வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை மானபங்கம் செய்த ஆடவன்

போர்ட் டிக்சன், மார்ச் 7 – போர்ட் டிக்சன், தாமான் ரியாவில் ( Taman Ria) மதுபோதையில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணை மானபங்கம் செய்த 24 வயது மதிக்கத்தக்க ஆடவனைப் போலீசார் கைது செய்தனர்.

அந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட 28 வயதுடைய பெண்ணிடமிருந்து இன்று அதிகாலை மணி 6. 20-க்கு புகார் பெற்றதாக, போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் Aidi Sham Mohamed தெரிவித்தார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தான் மானபங்கம் செய்யப்பட்டதாகவும் , கத்தி கூச்சலிட்டதைத் தொடர்ந்து , அந்த ஆடவன் தப்பியோடியதாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் 7 வயது பிள்ளையுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே விசாரணையின் போது, தான் மதுபோதையில் தவறாக வீட்டிற்குள் நுழைந்து விட்டதாக கைதான ஆடவன் கூறியுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!