கோலாலம்பூர், பிப் 22 – மத மாற்றம் தொடர்பில் ஷரியா நீதிமன்றங்கள் சீராய்வு மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும்படி பாஸ் பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சமய அதிகாரிகள் மதமாற்றம் தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டுவரும்படி பாஸ் கட்சியின் சமய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்வழி பிள்ளைளை மதமாற்றம் செய்வதில் பெற்றோரின் இருவரின் இணக்கமும் பெற வேண்டும் என்பதைவிட பெற்றோர் ஒருவர் அல்லது ஒருதலைப்பட்சமான மத மாற்றத்திற்கு அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பாஸ் கட்சியின் சமயப் பிரிவு கேட்டுக்கொண்டது