ஜோகூர் பாரு, பிப் 16 – ஒருவர் மந்திரிபெசார் பதவியில் இருப்பதை 2 தவணைகளுக்கு மட்டுமே இருப்பதை வரையறுக்கும்படி ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பெர்சே கேட்டுக்கொண்டது.
அதோடு அரசாங்க நிர்வாகத்தின் உயர் பதவிகளை வகிப்போருக்கு கால வரையரையை அறிமுகப்படுத்தும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஜோகூர் சவால்களை உறுதிப்படுத்தும் கொள்கை அறிக்கையை வெளியிடும்படியும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டது.
மந்திரிபெசார் பதவிக்கு உட்பட அடுத்த கட்ட தலைவர்களை ஜோகூர் கொண்டிருப்பதையும் இது வழிவகுக்கும் என்றும் பெர்சே வலியுறுத்தியது.