Latestமலேசியா

மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் மிதிக்கப்பட்டு ஆடவர் மரணம்

கோலாலம்பூர், டிச 6 – மனநலம் பாதிக்கப்பட்ட மகனால், அணிச்சல் வெட்டும் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அந்த சம்பவம் சிலாங்கூர், டெங்கிலில் உள்ள Kampung Jenderam Hulu பகுதியில் நிகழ்ந்தது.

உடலில் கத்து குத்துக் காயங்களால் படுகாயமடைந்ததோடு, பல முறை மிதிக்கப்பட்டதில், பாதிக்கப்பட்ட அந்த 73 வயது முதியவரின் மண்டை ஓடு உடைந்ததாகவும், புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Wan Kamarul Azran Wan Yusof தெரிவித்தார்.

தந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய 48 வயது ஆடவன், மனநல பாதிப்புக்கான மருந்தை அண்மைய காலமாக எடுத்து வராதது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!