கோலாலம்பூர், பிப் 16 – மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மூன்று கார்களையும் ஒரு மோட்டார்சைக்கிளையும் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
செர்டாங், Jalam Balakong கைச் சேர்ந்த அந்த ஆடவர் Taman Sungai Besi மற்றும் Sungai Besi நெடுஞ்சாலையில் BMW காரை ஓட்டிச் சென்றபோது perodua Myvi, Mazda மற்றும் Honda Jazz ஆகிய மூன்று கார்களை மோதியுள்ளார்.
அதோடு Yamaha மோட்டார் சைக்கிளில் சென்ற உணவு வினியோகிப்பாளரையும் அந்த ஆடவர் மோதியிருப்பதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறையின் துணைத் தலைவர் Zulkafli Chek Lah தெரிவித்தார்.
37 வயதுடைய அந்த சந்கேப் பேர்வழி கைது செய்யப்பட்டு Salak Selatan Baru போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.