Latestமலேசியா

மனநிலை பாதிக்கப்பட்ட ஆடவன் தாக்குதல்; 4 போலீஸ்காரர்கள் காயம்

தும்பாட், பிப் 14 – மனோநிலை பாதிக்கப்பட்ட ஆடவன் நடத்திய தாக்குதலில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட நான்கு போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும் நம்பப்படும் அந்த நபர் நடத்திய தாக்குதலில் தலை மற்றும் உடலின் பல பகுதியில் போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் அனைவரும் தும்பாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர்கள் என தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Azmir Damiri தெரிவித்தார்.

கம்போங் செடாரில் ஒரு வீட்டிற்கு பின்னால் ஆடவன் ஒருவன் கையில் பாராங் கத்தியுடன் வெறித்தனமாக சுற்றிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆடவனை கைது செய்ய சென்றபோது அந்நபர் போலீசாரை நோக்கி வெறித்தனமாக தாக்கியதாக முகமட் அஸ்மிர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!