
புத்ரா ஜெயா ஜூன் 2- இந்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற
விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வி, சிவகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார். மலேசியா மற்றும் இந்தியாவுக்கிடையே நீண்டகால நட்புறவும் ஒத்துழைப்பும் இருந்து வருவதால் அவை தொடரப்பட வேண்டும் என இந்த சந்திப்பின்போது சிவக்குமார் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுகிடையே பொருளாதாரா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பும் மேலும் வடைவடைய வேண்டும் என சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.
மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.