
ஜகார்தா, மே 11 – மனித முகம் கொண்ட ஒரு கண்ணுடன் ஆட்டுக் குட்டி ஒன்று ஜகார்த்தாவில் கிராமம் ஒன்றில் பிறந்துள்ளது. உடல் ஆட்டைப் போலவும், முகம் அதன் தாடியினால் மனிதரைப் போலவும் காட்சியளித்ததாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
உடலில் உரோமம் எதுவும் இன்றி, ஒற்றைக் கண்ண்டுடன் பிறந்துள்ள அந்த ஆட்டுக் குட்டி பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
துரதிஸ்டவசமாக அந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த 20 நிமிடத்திலேயா இறந்துவிட்டது.