
கோலாலம்பூர், மே 4 – மனித வள அமைச்சர் வி.சிவக்குமாரின் கீழ் வேலை செய்துவந்த ஒப்பந்தகால ஐந்து அதிகாரிகள் நீக்கப்பட்டனர் என அந்த அமைச்சுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன. மற்றொரு அதிகாரி மனித வள அமைச்சிலிருந்து ஜே.பி.ஏ எனப்படும் பொதுச் சேவைத் துறைக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறின. அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பது தொடர்பான கடந்த மாதம் சிவக்குமாரின் இரண்டு அதிகாரிகளை விசாரணைக்காக கைது செய்த எம்.ஏ.சி.சி நான்கு நாட்கள் தடுத்து வைத்திருந்த பின்னர் அவர்களை விடுவித்தது