
கோலாலம்பூர், ஏப் 30 – வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்கும் விவகாரம் தொடர்பாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினரா இல்லையா என்பது குறித்து எம்.ஏ.சி.சி விரைந்து முடிவை தெரிவிக்க வேண்டும் என பெர்சே தலைவர் Thomas Fann அறைகூவல் விடுத்தார். இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுப்பதை தடுப்பதற்கு மனித வள அமைச்சர் சிவக்குமாருக்கு எதிராக விசாரணையை MACC மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் விரைந்து முடிக்க வேண்டும் என பெர்சே கோரிக்கை விடுத்துள்ளது. MACC தனது விசாரணையை முடித்துவிட்டால் சிவக்குமார் சட்டத்தை மீறியிருக்கிறரா இல்லையா என்பதை குறித்து சட்டத்துறை தலைவர் அலுவலகம் பொதுமக்களுக்கு தெரிவிக் வேண்டும் என Thomas Fann தெரிவித்துள்ளதாக FMT இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.