
குவாலா பீலா, நவம்பர் 10 – நெகிரி செம்பிலான், கெமெஞ்சோவிலுள்ள (Gemencheh), உணவகத்திற்கு வெளியே நடைப்பாதையில், மனைவியை தாக்கி காயம் விளைவித்த ஆடவன் ஒருவனுக்கு, ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, குவாலா பீலா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
46 வயது இஸ்மாயில் இப்ராஹிம் எனும் அவ்வாடவன் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன், மனைவியை தாக்கிய அதே குற்றத்திற்காக இஸ்மாயிலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும், அவன் இன்னும் திருந்திய பாடில்லை என்பதை மாஜிஸ்திரேட் தீர்ப்பை அறிவித்த போது சுட்டிக் காட்டினார்.
இம்மாதம் ஏழாம் தேதி, இரவு மணி 9.10 வாக்கில், கெமெஞ்சோவிலுள்ள, உணவகத்திற்கு முன்புறம், வேண்டுமென்றே தமது 47 வயது மனைவியை இஸ்மாயில் அடித்து காயம் விளைவித்தாக அவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.