கோலாலம்பூர், ஆகஸ்ட்-10 – Toto 4D நான்கு இலக்க லாட்டரியில் பஹாங்கைச் சேர்ந்த 70 வயது முதியவர் 2 கோடியே 33 லட்சம் ரிங்கிட்டை வென்று ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.
மனைவியின் கார் பதிவு எண் தமக்கு அந்த பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுத்திருப்பதாக ஒரு மருத்துவரான அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும் 9938, 8388 என்ற அதிர்ஷ்ட எண்ணை தாம் தெரிவுச் செய்ததாக அவர் மேலும் கூறினார்.
மொத்தம் 2 கோடியே 66 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டிலான ஜூலை மாதத்திற்கான Toto Jackpot பரிசு விழுந்த நால்வரில், இந்த 70 வயது மருத்துவரும் அடங்குவார்.
பரிசுப் பணத்தை பிள்ளைகளுக்குக் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
எனக்கு வயதாகி விட்டது; இவ்வளவுப் பணத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்? பிள்ளைகளிடம் கொடுத்தால், அவர்களின் தொழில் பெருக்கத்திற்கு அது உதவுமே என்றார் அவர்.
லாட்டரியில் பணம் கட்டுவதே தனக்கு மகிழ்ச்சி தான் என்றும், கோடிக்கணக்கில் பரிசு விழுந்தது ஒரு போனஸ் என்றும் அவர் கூறினார்.